விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்!
தென்காசி, 1 நவம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று சனிக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது சற்று அதிகரித்து காணப்பட்டு வருகிறத
Courtallam Falls


தென்காசி, 1 நவம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று சனிக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் கூட்டம் என்பது சற்று அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கடந்த சில தினங்களாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டமானது குறைந்த அளவே காணப்பட்ட நிலையில், இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கடந்த நாட்களை விட இன்றைய தினம் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக, குற்றாலம் பகுதியில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது தண்ணீரானது சீராக கொட்டி வரும் நிலையில், சீராக கொட்டி வரும் தண்ணீரில் ஆனந்த குளியல் போட்டு விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் பகுதிக்கு வருகை தந்துள்ள நிலையில் குற்றாலமானது மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளது.

குறிப்பாக, பழைய குற்றால அருவியில் மட்டும் பராமரிப்பு பணிகள் நிறைவு பெறாததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் வரத்து சீராக கொட்டியும் பழைய குற்றால அருவியில் குளிக்க முடியாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN