Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 1 நவம்பர் (ஹி.ச.)
சுதந்திர போராட்ட வீரரும் தேசியமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என்று வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவனின் ஆவது ஜெயந்தி விழாவும் வது குருபூஜை விழாவும் அக்டோபர் 30 ஆம் தேதி அன்று இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அவரது சொந்த ஊரான பசும்பொன்னில் கொண்டாடபட்டது.
இவ்விழா ஆண்டு தோறும் அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அ.தி.மு.க பொது செயளாளரும் அன்றய முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தின் மேல் வைக்கபட்ட 3 அடி உயரம் கொண்ட தேவர் திரு உருவ சிலைக்கு 13.5 கிலோ எடை கொண்ட தங்கத்தினால் செய்யபட்ட கவசத்தை அணிவித்தார்
இந்த தங்ககவசம் அ.இ.அ.தி.மு கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. இக்கவசமானது அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா அன்று பொதுமக்களின் பார்வைக்கு தேவர் திரு உருவ சிலைக்கு அணிவிக்கப்படும். பின்னர் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள இந்தியின் வங்கியில் உள்ள பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கபடும்.
அதன்படி இன்று தேவர் நினைவாலயத்தில் மீது வைக்கப்பட்ட அவரது திருஉருவ சிலையிலிருந்து எடுக்கபட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேவர் நினைவாலய பொருப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் அவர்களின் தலைமையில் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் வங்கி பெட்டகத்தில் பாதுகாத்து வைப்பதற்காக பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN