Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 1 நவம்பர் (ஹி.ச.)
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகரப் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் எதிரே திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தீப்பொறியானது ஏற்பட்டு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீ பற்றி எரிந்துள்ளது.
இதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் அருகாமையில் இருந்த கடைக்காரர்கள் தண்ணீரை ஊற்றி தீயானது மேலும் பரவாமல் அணைத்த நிலையில், திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நடைபெற்ற இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்தில் யாருக்கும் நல் வாய்ப்பாக காயம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து மோட்டார் சைக்கிளின் உரிமையாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN