Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 12 நவம்பர் (ஹி.ச.)
தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர்கள் அய்யம் பிள்ளை, பழனிச்சாமி, ஞானகுரு மற்றும் தலைமை காவலர் பொன்ராம் ஆகியோர் நேற்று (நவ 11) இரவு புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோடு கேம்ப் 1 சர்வீஸ் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரே மோட்டார் பைக்கில் வந்த 5 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.
போலீசாரின் சோதனையில் பெட்ரோல் டேங்க் மேல் வைத்திருந்த சாக்குப் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, தெர்மல்நகர் கோயில் பிள்ளை விளையைச் சேர்ந்த செந்தூரப்பாண்டி மகன் ரீகன் (21), சேகர் மகன் சதீஷ் (22) மற்றும் 3 இளம்சிறார்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் கஞ்சா எங்கிருந்து பெறப்பட்டது, யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b