Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 12 நவம்பர் (ஹி.ச.)
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாநகரமாக விளங்குகிறது கோவை மாவட்டம், இங்கு உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.
இந் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் ஊருக்குள் புகுந்து வனவிலங்குகள் தினமும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கோவை மாநகரின் மத்திய பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியேறிய குரங்கு ஒன்று புகுந்தது.
அங்கு உள்ள சிறுதானிய உணவகம் என்று மகளிர் உணவக பகுதிக்குள் நுழைந்த அந்தக் குரங்கு அங்கு சிதறிக் கிடக்கும் குப்பைகளில் இருந்த உணவை தின்றது.
அப்பொழுது அதன் அருகே சென்ற ஊழியர்களை ஆக்ரோஷமாக முறைத்துக் கொண்டு உணவுப் பொருட்களை உண்டது. மேலும் அங்கு உணவு அருந்து வந்த ஊழியர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் உணவுப் பொருள்களை பிடுங்கி தின்றுவிடுமோ என்ற அச்சத்தில் செய்வதாக அறியாது உணவு அருந்த முடியாமல் திகைத்தனர். மேலும் இது குறித்து வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குரங்கு புகுந்ததால் மதிய உணவு உண்ண முடியாமல் தவித்தனர் ஊழியர்கள்.
Hindusthan Samachar / V.srini Vasan