Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 12 நவம்பர் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம், பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி ( 67) தனியார் பள்ளியில் தாளாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முத்தனூர் பகுதியில் பள்ளியில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 7-மர்ம நபர்கள் கருணாநிதியை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கி விட்டு கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி சென்றுள்ளனர்.
காயமடைந்த கருணாநிதியை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பூமிநாதன் 46, சிவகுமார் என்கிற கிஷாபாய் 25, சிலம்பரசன் 38, கார்த்திகேயன் (எ) அப்துல் சாருக் 42, வடிவேல் 41, சத்யராஜ் 31, சக்திவேல் 53, உள்ளிட்ட 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கொள்ளடிக்கப்பட்ட 10 சவரன் தங்க செயின், மேலும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு இரு சக்கர வாகனம், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பூமிநாதன் என்பவர் மீது ஏற்கனவே சென்னை ஆவடி குளத்தூர் புளியந்தோப்பு நாகப்பட்டினம் நாமக்கல் திருச்சி வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மொத்தம் 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவக்குமார் என்பவர் மீது கரூர் வெள்ளியணை பசுபதிபாளையம் தாந்துன்றி மலை வெங்கமேடு ஆகிய காவல் நிலையங்களில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலம்பரசன் என்பவர் மீது திருச்சி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சத்யராஜ் என்பவர் மீது நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செயின் பறிப்பு வழக்கில் குற்றவாளிகளை 48 மணி நேரத்திற்குள் கைது செய்த வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் மற்றும் குற்றப்பிரிவு போலீசாருக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா நேரில் பாராட்டு தெரிவித்தார்.
Hindusthan Samachar / ANANDHAN