மருத்துவர்களை நியமிக்க முடியாத அளவுக்கு நிதிப் பற்றாக்குறை நிலவுகிறதா? - மருத்துவர்கள் கேள்வி
சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும் அரசு மருத்துவர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்
Doctors Protest


சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையை 20 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரமாக உயர்த்த வேண்டும் அரசு மருத்துவர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில், போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது பேசிய,

அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன்,

அரசாணை எண்.508இல் மருத்துவர்கள் ஆட்குறைப்பு என்ற அடிப்படையில் ஆட்குறைப்பு செய்துள்ளனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கை பயனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதிகரிக்க வேண்டி நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் மருத்துவர்களை குறைப்பது பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரசாணை 358 ரத்து செய்ய வேண்டும்.

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியால் 2019இல் வழங்கப்பட்ட அரசாணை 354இன் பிரிவுகளை ரத்து செய்தபோது நீக்கப்பட்ட 1,500 பணியிடங்களை மீண்டும் வழங்கி மருத்துவர்களின் பணிசுமையை குறைக்க வேண்டும்.

கோவிட்-19க்கு பிந்தைய காலகட்டத்தில் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவமனைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கேற்ப மருத்துவர் பணியிடங்கள்

(sanctioned posts) எண்ணிக்கை 20 ஆயிரம் என்பதை 40 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டு, கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். தமிழ்நாடு மருத்துவத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே சம்பள உயர்வை அளிக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களுக்கும் மாதம் ரூ.3,000 ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்.

2019 முதல் இதுவரை மாநிலம் முழுவதும் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன. சுமார் 100 புதிய மருத்துவ கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இதற்கேற்ப போதுமான மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. இதனால் தற்போது மருத்துவப் பணிகள், கல்வித்தரம் மற்றும் பயனாளிகளுக்கான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவக்கல்வியை மட்டும் பார்க்கின்றனர். நாங்கள் பயனாளிகளின் எண்ணிக்கையும் பார்க்கிறோம். புதியதாக மருத்துவமனைகளும், கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் மருத்துவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. மருத்துவர்களுக்கு தங்குவதற்கான இடவசதி குறைவாகவே உள்ளது. அதனை உயர்த்தி தர வேண்டும். மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்தினால் தான் தரமான சிகிச்சை அளிக்க முடியும். அப்போதுதான் பணிசுமை குறைவாக இருக்கும்.

அரசு மருத்துவர்கள் தனியாக சிகிச்சை அளிக்க கூடாது என விதிகள் இல்லை. எனவே தனியாக தமிழ்நாட்டில் சிகிச்சை அளிக்க முடியும். எம்.பி.பி.எஸ் படித்து முடித்தப் பின்னர் அரசு மருத்துவராக பணி செய்ய எந்த உதவியும் செய்வது இல்லை. அவர்களுக்கு 40 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும்.

அரசிடம் புற்றுநோய் மருத்துவர், பச்சிளம் குழந்தை மருத்துவர் போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த மருத்துவர்களை நியமிப்பதற்கு கூட வழியில்லாத அளவுக்கு நிதிப் பற்றாக்குறை நிலவுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

400 மருத்துவ பணியிடங்களை ஒப்படைப்பதால் சேவைக் குறைபாடு ஏற்பட்டு மக்கள் தனியார் மருத்துவமனைகளை நோக்கி செல்லக்கூடும்.

இந் நடவடிக்கை அரசே தனியார்மயத்தை ஆதரிக்கும் வகையில் உள்ளது.

அரசின் நடவடிக்கையை பொறுத்து அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN