UPSC நடத்திய தேர்வில் 2736 பேர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நேர்காணல் நிலைக்கு தேர்வாகியுள்ளனர்
சென்னை, 12 நவம்பர் (ஹி.ச) யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்திய 2025 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 2736 பேர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நேர்காணல் நிலைக்கு தகுதி பெற்று
Civil


சென்னை, 12 நவம்பர் (ஹி.ச)

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) நடத்திய 2025 ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 2736 பேர் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான நேர்காணல் நிலைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து சுமார் 162 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தத் தேர்வு மூன்று தொடர்ச்சியான நிலைகளைக் கொண்டுள்ளது.

மே 25, 2025 அன்று நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் முதற்கட்ட தேர்வில் சுமார் 7 லட்சம் பேர் கலந்து கொண்டனர். சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுக்கு சுமார் 14161 மாணவர்கள் தகுதி பெற்றனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு யுபிஎஸ்சி ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை முதன்மைத் தேர்வை நடத்தியது.

இந்தமுதன்மைத் தேர்வில் தகுதி பெற்ற விண்ணப்ப தாரர்களுக்கு, டெல்லியில் நேர்முக தேர்வை (PAT) UPSC நடத்தும் எனவும் விரைவில் இதுகுறித்த தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ