ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்து மக்களுடன் கலந்துரையாடினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கோவை, 12 நவம்பர் (ஹி.ச.) மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட ஜி.எஸ்.டி வரி சீர்திருத்த நடவடிக்கை காரணமாக பல்வேறு பொருட்கள் விலை குறைந்து உள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்கள் மற
GST tax reduction: Union Finance Minister Nirmala Sitharaman interacts with the public in Coimbatore.


GST tax reduction: Union Finance Minister Nirmala Sitharaman interacts with the public in Coimbatore.


GST tax reduction: Union Finance Minister Nirmala Sitharaman interacts with the public in Coimbatore.


கோவை, 12 நவம்பர் (ஹி.ச.)

மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட ஜி.எஸ்.டி வரி சீர்திருத்த நடவடிக்கை காரணமாக பல்வேறு பொருட்கள் விலை குறைந்து உள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் வரி குறைப்பு குறித்து கலந்துரையாடினார். குறிப்பாக இல்லத்தரசிகளிடம் வரி குறைப்பு காரணமாக பலன் கிடைத்து உள்ளதா ? என கேட்டு விவரங்களை தெரிந்து கொண்டார்.

இதை தொடர்ந்து வணிகர்களிடம் செலுத்திய வரியை மீண்டும் பெறும் திட்டம் (இன்புட் டேக்ஸ் கிரேடிட்) தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தியதுடன் வரி குறைப்பு மக்களுக்கு சென்று அடைவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வின் போது பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.

Hindusthan Samachar / V.srini Vasan