சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு - அல்காரஸ் முதலிடத்துக்கு முன்னேற்றம்
நியூயார்க், 12 நவம்பர் (ஹி.ச.) சர்வதேச டென்னிஸ் சங்கம் ( ஏ.டி.பி. ) வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (11,050 புள்ளி) 2வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு மீண்டும
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு - அல்காரஸ் முதலிடத்துக்கு முன்னேற்றம்


நியூயார்க், 12 நவம்பர் (ஹி.ச.)

சர்வதேச டென்னிஸ் சங்கம் ( ஏ.டி.பி. ) வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் (11,050 புள்ளி) 2வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு மீண்டும் முன்னேறினார்.

இத்தாலியின் ஜானிக் சின்னர் (10,000 புள்ளி) முதலிடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 3வது இடத்தில் உள்ளார்.

செர்பியாவின் ஜோகோவிச் 4வது இடத்துக்கு முன்னேறினார்.

அமெரிக்காவின் பென் ஷெல்டன் (3,970 புள்ளி) 5வது இடம் பிடித்துள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM