Enter your Email Address to subscribe to our newsletters

காரைக்கால், 12 நவம்பர் (ஹி.ச.)
சீனாவில் நடைபெற்ற ஆசியா அளவிலானா 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவிற்காக வெண்கலப்பதக்கம் வென்று புதுச்சேரி மாநிலத்திற்கும் காரைக்கால் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த அக்கம்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த ரமேஷ் - கீதாமணி தம்பதியரின் மகள் ஜனனிகாவை புதுச்சேரி அமைச்சர் திருமுருகன், மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், துணை மாவட்ட ஆட்சியர் பூஜா, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துவரும் நிலையில் இன்று காரைக்கால் ஸ்டேடியத்தை பயன்படுத்துவோர், காரைக்கால் ஸ்டேடியம் குரூப்ஸ் என்ற பெயரில் அமைப்பை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் ஸ்டேடியம் குரூப்பில் சார்பில் சீனாவில் நடைபெற்ற ஆசியா அளவிலானா 17 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவிற்காக வெண்கலப்பதக்கம் வென்ற காரைக்கால் மாணவி ஜனனிகா மற்றும் பயிற்சியாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோரை பாராட்டு வகையில் சால்வனைக்கும் நினைவு பரிசு வழங்கியும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி விஜய மோகனா, காரைக்கால் ஸ்டேடியம் குரூப் நிர்வாகிகள், ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / Durai.J