Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 நவம்பர் (ஹி.ச)
சென்னை தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில்
எஸ்.ஐ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ஆலோசனை கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியதாவது,
எஸ்.ஐ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்பது 100 சதவீதம் எதிரானது 100% பொதுமக்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் அது நமது கடமை.
முன்பு படிவம் 6 புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல். படிவம் 7 மற்றும் 8 பெயர் நீக்குதல் முகவரி மாற்றுதல் என தமிழக அரசு சார்பில் முகாம் நடத்தப்படும்.
டிசம்பர் ஜனவரி பிப்ரவரி மாதத்தில் எவ்வளவு வாக்காளர்கள் இருக்கிறார்கள் என அந்தந்த மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார்கள். சென்னையில் தமிழக தேர்தல் அதிகாரி அதே போன்று சென்னை மாநகராட்சி சார்பிலும் வெளியிடப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள
எஸ்.ஐ.ஆர் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தோம் ஆனால் அதை ஏற்கவில்லை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆனால் எஸ்.ஐ.ஆர் சிறப்பு வாக்காளர் திருத்தம் பணிக்கு தடை விதிக்கவில்லை.
தற்போது நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் டிசம்பர் 9ஆம் தேதி அன்று வெளியிடப்படுகிறது அதில் எத்தனை வாக்காளர்கள் விடுபட்டு இருக்கிறார்கள் என தெரிய வரும்.
எனவே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கி விடாமல் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் அதே போன்று தான் நடைபெற இருக்கக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / P YUVARAJ