செவாலியே விருது பெற உள்ள கலை இயக்குனர் தோட்டா தரணி ,ஒட்டு மொத்த தமிழர்களுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார் - நாகேந்திரன் பெருமிதம்
சென்னை, 12 நவம்பர் (ஹி.ச) திரைப்படக் கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவருக்கு எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்து
Thotta


Nainar


சென்னை, 12 நவம்பர் (ஹி.ச)

திரைப்படக் கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவருக்கு எக்ஸ் தளத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணி அவர்களுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

64 ஆண்டுகளாக கலை வடிவமைப்பில் தன்னை ஈடுபடுத்தி இந்திய அளவில் தவிர்க்க முடியாத கலை இயக்குநராக விளங்குகிறார் திரு தோட்டா தரணி அவர்கள்.

நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி பகுதி, காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர் உள்ளிட்டவை சென்னையில் செட் அமைத்து எடுக்கப்பட்டவை என்றால், நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். அந்த நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது தோட்டா தரணியின் கலை இயக்கம்.

தோட்டா தரணியின் அளப்பரிய கலைத்திறனுக்காக இந்த உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ