Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 12 நவம்பர் (ஹி.ச.)
கோவை ஸ்ரீ அன்னை ஜூவல்ஸ் அறிமுகபடுத்தி உள்ள புதிய திட்டத்திற்கு பெண்கள் இடையே வரவேற்பு
பெண்களின் பாதுகாப்பிற்காக, அவசர காலங்களில் உதவும் 'காவலன்' செயலியை தமிழக காவல் துறை அண்மையில் அறிமுகபடுத்தினர்.
இந்த காவலன் செயலியை பெண்கள் பயன்படுத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் காவல் துறையினர் பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் பெண் ஒருவர் இரவு நேரத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மாநகர காவல் துறை ஆணையர் காவலன் செயலியை பெண்கள் பயன்படுத்த முன்வருமாறு கேட்டு கொண்டார்.
இந்நிலையில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையை சேர்ந்த ஸ்ரீ அன்னை ஜூவல்ஸ் நகை கடை நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அதன் படி கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள அவரது நகை கடையில் நடைபெற்று வெள்ளி நகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்பவர்களுக்கு ஒரு கிராம் வெள்ளி போனஸ் சேமிப்பாக வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.
இது குறித்து சீனிவாசன் கூறுகையில்,
ஆபத்தான நேரங்களில் பெண்கள் காவல் துறையை தொடர்பு கொள்ள காவலன் செயலியை அறிமுகபடுத்தி இருந்த போதும் அது தொடர்பான விழிப்புணர்வு பெண்களிடையே சரி வர தெரிவதில்லை என கூறிய அவர், எனவே காவலன் செயலி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் விதமாக காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ள பெண்களுக்கு ஒரு கிராம் வெள்ளி சலுகையை வழங்குவதாக அவர் கூறினார்.
Hindusthan Samachar / V.srini Vasan