டெல்லி குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்
புதுடெல்லி, 12 நவம்பர் (ஹி.ச.) இந்திய தலைநகர் புதுடெல்லி, செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து நவ 10 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்து எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுடெல்லி


புதுடெல்லி, 12 நவம்பர் (ஹி.ச.)

இந்திய தலைநகர் புதுடெல்லி, செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து நவ 10 ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்து எல்என்ஜேபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.

இந்நிலையில் 2 நாட்கள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் மோடி, இன்று (நவ 12) மதியம் டில்லி திரும்பினார். உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களின் நலத்தையும் பிரதமர் கேட்டறிந்தார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,

டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்று சந்தித்தேன். அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b