Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 12 நவம்பர் (ஹி.ச.)
இரண்டு நாள் பயணமாக பூடான் சென்ற பிரதமர் மோடி திம்புவில் உள்ள காலசக்கர அபிஷேகம் நிகழ்வில் அந்நாட்டு மன்னருடன் இணைந்து பங்கேற்றார். விழாவின் ஒரு பகுதியாக மன்னர் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.
இது குறித்து பிரதமர் மோடி இன்று (நவ 12) எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது கூறியதாவது:
பூடான் மன்னர் ஜிக்மே நாம்கியேல் வாங்சுக்குடன் ஒரு அற்புதமான சந்திப்பு நடைபெற்றது. இந்தியா-பூடான் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம். இந்தியா-பூட்டான் உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட விரிவான முயற்சிகளைப் பாராட்டினேன்.
எரிசக்தி, வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்தேன். எங்கள் ஆக்ட் ஈஸ்ட் பாலிசியுடன் ஒத்துப்போகும் கெலேஃபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டி திட்டத்தின் முன்னேற்றத்தைப் பாராட்டினேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மற்றுமொரு பதிவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,
பூடான் மன்னருடன் காலசக்கர அபிஷேகம் நிகழ்வில் பங்கேற்கும் பெருமையைப் பெற்றேன். உலகெங்கிலும் உள்ள பவுத்தர்களுக்கு இது ஒரு முக்கியமான சடங்கு, இது மிகவும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்தது, என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாட்கள் பூடான் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு பிரதமர் மோடி திம்புவிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.
பூடான் மன்னர் ஜிக்மே நாம்கியேல் வாங்சுக் மற்றும் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் அவரை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / vidya.b