Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 12 நவம்பர் (ஹி.ச.)
கோவை காளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் Suguna PIP(தனியார்) பள்ளி, FITTJEE என்ற நிறுவனத்துடன் இணைந்து அந்த பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சிக்கான தனி வகுப்புகளை நடத்துவதாகவும் அதற்கு பள்ளி கட்டணத்தை தவிர்த்து ஒரு லட்சம் ரூபாய் Refund கட்டணமாக செலுத்த வேண்டும், வகுப்புகள் முடிந்து 60 நாட்களுக்குள் அந்த ஒரு லட்சம் ரூபாய் திருப்பி தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாகவே இந்த திட்டத்தில் பலரும் அவர்களது குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வகுப்புகள் முடிந்த 262 மாணவர்களுக்கு அந்த Refund கட்டணம் திருப்பி வழங்கப்படவில்லை என்றும் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டால் தங்களுக்கும் அந்த நிறுவனத்திற்கும் சம்பந்தமில்லை அந்த நிறுவனத்திற்கு கட்டிடத்தை வாடகைக்கு தான் விட்டுள்ளோம் என்று அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் எனவே தங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என 50க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்தப் பள்ளியில் கோவை மாணவர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வரும் நிலையில் இந்த ஆண்டு மட்டும் 262 மாணவர்களுக்கு அந்த கட்டணம் திருப்பி தரப்படவில்லை தங்களது பணம் 2 கோடி 62 லட்சம் பள்ளி நிர்வாகத்திடமும் அதன் நிறுவனத்திடமும் உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த நிறுவனத்தில் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் சிக்கல்கள் ஏற்பட்டு ஆசிரியர்கள் முறையாக மாணவர்களுக்கு வகுப்புகளையும் எடுக்காமல் பயிற்சிகள் பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய பெற்றோர்கள் காவல் ஆணையாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தர வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளனர்.
FITTJEE நிறுவனத்தின் வங்கி கணக்குகள் அரசால் முடக்கப்பட்டு அண்மையில் பல்வேறு மாநிலங்களில் பிரச்சனை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / V.srini Vasan