Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.)
டெல்லி வெடிகுண்டு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இதை தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் சந்தேக நபர்கள் யாராவது தங்கியுள்ளார்களா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய நெடுஞ்சாலைகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனை, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களிகள் உடைமைகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
ராஜகோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் நுழைவாயில் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
அங்கு கோபுர நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பக்தர்கள் கொண்டு வந்த பைகளை திறந்து பார்த்து மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b