கோவில் காவலாளிகள் கொலை வழக்கில் குற்றவாளி - சுட்டு பிடித்த போலீசார் போலீசார்
விருதுநகர், 12 நவம்பர் (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்ருளிய சாமி திருக்கோவிலில் காவலாளிகளை வெட்டி கொன்று உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில், குற்றவாளி நாகராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை ம
கோவில்


காவலர்


குற்றவாளி


விருதுநகர், 12 நவம்பர் (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்ருளிய சாமி திருக்கோவிலில் காவலாளிகளை வெட்டி கொன்று உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவத்தில்,

குற்றவாளி நாகராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற் கொண்டு திருடிய பொருட்களை மறைத்து வைத்திருந்த இடத்திற்க்கு அழைத்துச் சென்று வெள்ளி குத்துவிளக்கு தங்க காசு உள்ளிட்ட காலேஜ் பொருட்களை பறிமுதல் செய்த போது,

சார்பு ஆய்வாளர் கோட்டியப்பசாமியை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி செய்த பொழுது போலீசார் துப்பாக்கியால் குற்றவாளி நாகராஜை சுட்டு பிடித்துள்ளனர்.

வடக்கு தேவதானம் கணேசன் மகன் நாகராஜ் என்பவரை போலீசார் சுட்டு பிடித்து இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மேலும் இவருடன் இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட நாகராஜனின் சித்தப்பா மகனான முனியாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / Durai.J