பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.) சென்னையில் நாளை (13.11.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் ஒரு சில பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு


சென்னை, 12 நவம்பர் (ஹி.ச.)

சென்னையில் நாளை (13.11.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மாங்காடு: ஆவடி சாலை, மகிழம் அவன்யூ, பூஞ்சோலை வீதி, எம்எஸ்எஸ் நகர், அட்கோ நகர், மேட்டு தெரு, சிப்பாய் நகர், தந்தை பெரியார் நகர், காமராஜ் நகர், முருகபிள்ளை நகர், கங்கை அம்மன் கோயில், விநாயகா நகர், கோரிமேடு, பஜார் தெரு, கன்னம்புள்ளி செட்டி தெரு, அம்மன் கோயில் தெரு, குன்றத்தூர் சாலை.

மாத்தூர்: எம்எம்டிஏ 1 முதல் 3வது பிரதான சாலை வரை, இந்தியன் வங்கி, டிஎன்எச்பி லேக்விவ் குடியிருப்பு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b