Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 12 நவம்பர் (ஹி.ச.)
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆண்டிக்காடு ஊராட்சி, மல்லிப்பட்டினம் காசிம் அப்பா கிழக்கு, மேற்கு தெருவிற்கு வடிகால் வசதியுடன் கூடிய, சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் புதன்கிழமை துவக்கி வைத்தார்.
சேது பாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், நாகேந்திரன், திமுக சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளர் எஸ்.ஞானப்பிரகாசம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கிராம மக்கள், முஸ்லிம் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டனர்.
இப்பகுதியில், நீண்ட பல வருடங்களாக மழைக்காலங்களில், வடிய வழியின்றி மழைநீர் தேங்கி நின்றது. மேலும், சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில், வடிகால் வசதியுடன், புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கி இருப்பதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Hindusthan Samachar / V.srini Vasan