Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 நவம்பர் (ஹி.ச)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார்.. நடிப்பு மட்டுமல்லாமல், ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்கிறார். 'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார்..
‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கினார் அஜித். அவருடைய அணி ஐரோப்பிய கார் பந்தய போட்டியில் பங்கேற்றது.. துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் அஜித் குமார் ரேஸிங், டீம் விரேஜுடன் இணைந்து ஆசிய லீ மேன்ஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் அஜித்குமாருடன் இணைந்து நரேன் கார்த்திகேயன் கலந்துகொள்கிறார். இந்த தொடரில் அஜித்குமார் LMP3 எனும் ரேஸிங் அணி பயன்படுத்தும் ரேஸ் காரை நரேன் கார்த்திகேயன் உடன் இணைந்து அஜித்குமார் அறிமுகம் செய்தார்.
மலேசியாவில் இந்தாண்டு டிசம்பரில் தொடங்கும் இந்த தொடருக்காக அஜித்குமார் மற்றும் நரேன் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர் பார்சிலோனியாவில் கடந்த 10 மற்றும் 11ம் தேதி இந்த பயிற்சி நடைபெற்றது..
அஜித் குமார் ரேசிங் அணி பார்சிலோனா சர்க்யூட்டில் வெற்றிகரமான LMP3 சோதனையை நிறைவு செய்தது
அஜித் குமார் ரேசிங் அணி, புகழ்பெற்ற பார்சிலோனா சர்க்யூட்டில் நடைபெற்ற ஆசிய லீ மான்ஸ் சீரிஸ் முன் சீசன் சோதனையில் பங்கேற்றது. அணி லிஜியர் JS P320 LMP3 வாகனத்தை சோதித்து, வரவிருக்கும் போட்டிக்கான முக்கியமான அனுபவங்களையும் தரவுகளையும் பெற்றது.
இந்த அஜித்-ரெடாண்ட் டீம் மற்றும் டீம் விராஜ் இணைந்தன. அனுபவமிக்க ஓட்டுநர்கள் நரேன் கார்த்திகேயன், ஜூலியன் ஹெர்பி, ரோமைன் வோஸ்னியக், மற்றும் அஜித் குமார் மாறி மாறி கார் ஓட்டி பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை அமர்வுகள், அணியின் அடுத்தடுத்த பந்தய பருவத்திற்கான தயாரிப்பில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமைந்தன. அதன் வீடியோக்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ