கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்
சிவகங்கை, 12 நவம்பர் (ஹி.ச.) கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் வெகு விவரிசையாக கொண்டாடப்படுகின்றது கார்த்திகை தீப திருவிழாவில் வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றி விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்


சிவகங்கை, 12 நவம்பர் (ஹி.ச.)

கார்த்திகை தீப திருவிழா ஆண்டுதோறும் வெகு விவரிசையாக கொண்டாடப்படுகின்றது கார்த்திகை தீப திருவிழாவில் வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றி விமர்சையாக கொண்டாடுவார்கள்.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 3ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது அன்று மாலை வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில், மற்றும் தெருக்களில் விலங்குகள் ஏற்றி வழிபாடு மேற்கொள்வது வழக்கம்.

காத்திகை தீபத் திருநாள் கொண்டாடப்பட உள்ளதால் மானாமதுரையில் அகல் விளக்குகள் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மண்பாண்டப் பொருட்களுக்கு பெயர்போன மானாமதுரையில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் கலைநயம் மிக்கதாகவும், உறுதியாகவும், சுற்றுப்புற சூழலை பாதிக்காமல் இருப்பதாலும் பலரும் விரும்பி வாங்குகிறார்கள். சீசனுக்கு ஏற்றவாறு மண்பாண்டப் தொழிலாளர்கள் பொருட்களை தயாரித்து கூட்டுறவு சங்கத்தின் மூலம் விற்பனை செய்கின்றன.

சாதாரண அகல் விளக்கில் இருந்து. கண்ணை கவரும் கலைநயமிக்க பல்வேறு வடிவங்களில் இன்றைய தலைமுறையினர் விரும்பும் வகைக்கில் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. சாதாரண விளக்குகள் ஒரு ரூபாய் என்றும் கலைநயமிக்க பொருட்கள் அது வேலைப்பாடுகள் ஏற்ப ரூ.500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை, திருச்சி, காரைக்குடி, தேவைக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் வியாபாரிகள் விளக்குகளை வாங்க வருகை தருகின்றன. ஒரு ரூபாய் விற்பனை செய்யப்படும் கிளியன்சாட்டி எனப்படும் சிறிய விளக்குகள் நாள்தோறும் 200 விளக்குகள் வரை தயாரிக்கின்றன.

மற்ற விளக்குகள் அதன் வேலைப்பாடுகளுக்கு ஏற்ப நாள் ஒன்றுக்கு 4 முதல் 10 வரை தயாரிக்கின்றன. தயாரித்த விளக்குகளை சூளையில் வைத்து சுடப்பட்ட பின் விற்பனைக்கு அனுப்புகின்றன. இயற்கை ஆர்வலர்களும் பலரும் மானாமதுரை அகல் விளக்குகளை பெரிதும் விரும்பி வாங்கிச் செல்கின்றன.

Hindusthan Samachar / vidya.b