Enter your Email Address to subscribe to our newsletters

ஹி.ச.14 நவம்பர் (ஹி.ச.)
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றியடைந்துள்ளது.
அது மட்டுமின்றி இந்த பீகார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்த வெற்றியை பாஜக தலைவர்கள், தொண்டர்கள் நாடு முழுவதும் வெற்றியை கொண்டாடியும், இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் பாஜகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த பீகார் சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து,
பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு வருகை புரிந்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மோடியை நோக்கி மலர்தூவி வரவேற்றனர்.
மேலும் மோடி.. மோடி.. என உற்சாகமாக கோஷமிட்டனர்.
இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
நாம் மக்களின் ஊழியர்கள். மக்களின் இதயங்களை நாங்கள் திருடிவிட்டோம்.
அதனால் தான் முழு பீகாருரும் என் டி ஏ-வை ஆதரித்துள்ளது.
இது ஜனநாயகத்துக்கான வெற்றி.
ஜனநாயகத்தில் வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு இடமில்லை.
வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பீகார் பூமியில் இனி காட்டாட்சி ஒரு போதும் திரும்ப வராது.
பீகார் தேர்தலில் கிடைத்த வெற்றி பாஜகவுக்கானது இல்லை.
இது ஜனநாயகத்துக்கான வெற்றி.
அதிக வாக்குப்பதிவு தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்த வெற்றி.
நிதிஷ் குமாரின் தலைமை சிறப்பாக நடந்தது.
பீகார் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
பீகாரில் உள்ள பெண்கள், இளம் வயதினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வலிமையான நம்பிக்கையை வைத்துள்ளனர்.
தேர்தலில் அதிக வாக்கு பதிவானது இதனை உறுதி செய்துள்ளது.
இது தேர்தல் ஆணையத்துக்கு வலிமையை தந்துள்ளது.
பீகாரில் மறுவாக்குப்பதிவுக்கான தேவை இல்லை.
பீகாரில் இம்முறை மறுவாக்குப்பதிவு எதுவும் நடைபெறவில்லை.
முதன் முறையாக வாக்குப்பதிவின்போது வன் முறை இல்லை.
மக்களின் நம்பிக்கை வெற்றி பெற்றுள்ளது.
மக்கள் வளர்ச்சியை மட்டுமே விரும்புகின்றனர்.
பீகாரில் ரயில்வே திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டையாக இருந்தனர்.
மக்களை தேர்தல் மட்டுமின்றி பிற சட்டசபை தேர்தல்களில் வரலாற்று வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளோம்.
மத்தியில் 3-வது முறையாக ஆட்சியமைக்க மக்கள் ஆதரவளித்தனர்.
ஹரியானாவிலும் 3-வது முறை வெற்றி பெற்றோம்.
அம்பேத்கர், சாவர்கள் பிறந்த புண்ணிய பூமியான மகாராஷ்டிராவிலும் வெற்றி பெற்றோம்.
டெல்லியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளோம்.
நாட்டின் மூலை முடுக்குகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணியை விரும்புகின்றனர்.
பீகார் தேர்தல்கள் இன்னும் ஒரு விஷயத்தை நிரூபித்துள்ளன.
இப்போது நாட்டின் வாக்காளர்கள், குறிப்பாக நமது இளம் வாக்காளர்கள், 'வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்துவதை (SIR) மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
பீகார் இளைஞர்களும் வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவளித்துள்ளனர்.
இப்போது ஒவ்வொரு கட்சியும் வாக்குச் சாவடிகளில் தங்கள் கட்சிகளை செயல்படுத்தி, வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணியில் ஆர்வத்துடன் இணைந்து, 100 சதவீத பங்களிப்பை வழங்குவது பொறுப்பாகும்.
இதனால் மீதமுள்ள இடங்களிலும் வாக்காளர் பட்டியல் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்படும் என்றார்.
Hindusthan Samachar / Durai.J