குழந்தைகள் தினம் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை
சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.) பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குழந்தைகள் தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, தேசத்தின் எதிர்கால நம்பிக்கையான குழந்தைச் செல்வங்கள்
Annamalai


Tweet


சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குழந்தைகள் தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

தேசத்தின் எதிர்கால நம்பிக்கையான குழந்தைச் செல்வங்கள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகள் அனைவருக்கும், சிறப்பான கல்வி, ஆரோக்கியம், மகிழ்ச்சியான நல்வாழ்க்கையை உறுதி செய்வது நம் அனைவரின் கடமை. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்கள், பல்வேறு துறைகளில் சாதனை செய்து தேசத்தைப் பெருமைப்படுத்த, பெற்றோர்களும், சமூகமும் உறுதுணையாய் இருப்போம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ