Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் 26.08.2025 அன்று தொடங்கிவைக்க உள்ளார். இத்திட்டத்தின் வாயிலாக 3.05 இலட்சம் மாணவ மாணவியர்கள் தினசரி பயன் பெற உள்ளார்கள்.
இந்நிலையில் சென்னை திரு .முல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இன்று (நவ 14) காலை அப்பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் சா.மு.நாசர் அமர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்த காலை உணவு திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட காலை உணவை சாப்பிட்டார்.
அவருடன் ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆணையர் சரண்யா, மாநகர செயலாளர் சண்பிரகாஷ், மண்டல தலைவர் அமுதா பேபிசேகர், பகுதி செயலாளர்கள் பேபிசேகர், பொன் விஜயன், வழக்கறிஞர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.
Hindusthan Samachar / vidya.b