திமுக அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஆப்பு வைத்திருக்கிறது - சி.வி.சண்முகம்
விழுப்புரம், 14 நவம்பர் (ஹி.ச.) தமிழகத்தில் பெருகி வரும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கலாச்சாரம் சட்ட ஒழுங்கை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் திண்டிவனம் காந்தி சிலை முன்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்
C.V.Shanmugam


விழுப்புரம், 14 நவம்பர் (ஹி.ச.)

தமிழகத்தில் பெருகி வரும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கலாச்சாரம் சட்ட ஒழுங்கை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் திண்டிவனம் காந்தி சிலை முன்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம்,

கொலை, கொள்ளை கற்பழிப்பு, கஞ்சா போன்றவை வராத நாட்களே இல்லை சட்ட ஒழுங்கு சரியில்லை அந்த துறைக்கு அமைச்சராகவும் முதல்வராகவும் உள்ள ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்.

போதையை கட்டுபடுத்த ஏன் தயங்குகிறார், குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க முடியாமல் நடவடிக்கை எடுக்க முடியாமல் அச்சப்படுகிறார், ஏன் தூங்கி கொண்டிருக்கிறார் என கேள்வி எழுப்பினார்.

பல பேர் தமிழகத்தை ஆட்சி செய்து இருக்கிறார்கள் அங்கொன்றும் இன்கொன்றும் நடைபெற்று கொண்டிருக்க குற்ற செயல்களில் நடவடிக்கை எடுக்கும் போது அச்சப்படுவார்கள், ஆனால் இன்றைக்கு அப்படி நூறு கிராம் கஞ்சா பிடித்தது போய் நூறு கிலோ கஞ்சா பிடி படுகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில் மூன்றாயிரம் கோடிக்கு திமுக நிர்வாகி ஜாபர் ஜாதீக் போதை மருந்து விற்பனை செய்துள்ளார். கஞ்சா போதை பொருள் விற்பனை செய்பவர்களுக்கு பயமில்லை,

பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யபடுகிறது. அரிசி பருப்பு கிடைக்கிறதோ இல்லையோ கஞ்சா கிடைக்கிறது என கூறினார்.

தீபாவளிக்கு வாழ்த்து சொல்லமாட்டாங்கள் ஆனால் தீபாவளியை மட்டும் கொண்டாடுவார்கள், துணை முதல்வருக்கு என்று கொடுக்கப்பட்ட சமூக வலைதளத்தில் மதி மயங்கி கிளு கிளுப்பான படங்களை உதயநிதி பதிவிடுகிறார்.

சொந்த மகனையே திருத்த முடியாத முதலமைச்சர் கிட்ட போய் நாட்டை திருத்து என்றால் எப்படி செய்வார், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறையே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுகின்றனர். இது இங்கு மட்டும் அல்ல திருவண்ணாமலையில் தாயின் கண்னெதிரே மகள் கற்பழிக்கப்பட்டுகிறாள்,

பள்ளிக்கு செல்லும் மாணவிக்கும் பாதுகாப்பு இல்லை வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு பாதுகாப்பு இல்லை எல்லாம் கஞ்சா போதையில் கற்பழிக்கபடுகிறார்கள்.

யாருக்கும் தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறைக்கே அச்சமில்லை, ஒழுக்கமில்லை டிஜிபி சங்கர் ஜிவால் உதயநிதிக்கு வேலை செய்வதுதான் அவருடைய வேலை காவல் துறைக்கு தலைவர் இல்லை இங்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது என தெரியவில்லை என விமர்சனம் செய்தார்.

திமுகவில் தனக்கு பிறகு யாரும் வரகூடாது தன் குடும்பம் மட்டுமே இருக்கனும் திறமை இல்லாத ஆர்வம் இல்லாத உதயநிதியை துணை முதல்வராக்கி உள்ளார்.

கலைஞர் கருணாநிதியை பாராட்டலாம் அவர் இறக்கும் வரை ஸ்டாலினுக்கு தலைவர் பதவியும், முதலமைச்சர் பதவியும் வழங்கவில்லை. அதிகாரத்தில் இருக்க வேண்டுமென்பதால் பித்தலாட்ட தில்லுமுல்லு வேலையை திமுக அரசு செய்து வருகிறது.

இறந்தவர்கள் வாக்குகளை போட்டு வெற்றி பெற்ற திமுக அரசுக்கு தேர்தல் ஆணையம் எஸ் ஐ ஆர் என்ற அமைத்து ஆப்பு வைத்தது. எஸ் ஐ ஆர் என்றாலே முதல்வர் ஸ்டாலினுக்கு ஜன்னி வந்துவிடும், தேர்தல் ஆணையத்தில் எஸ் ஐ ஆரை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக கூறியது.

எங்களுக்கு எஸ் ஐ ஆரை கண்டு பயமில்லை. தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் ஆளும் கட்சி ஆட்சியாளர்களாக செயல்படுகின்றனர்.

ஐ ஏ எஸ் அதிகாரிகள் என்ன தான் கொள்ளை அடிச்சாலும் அவர்கள் மாட்டி கொள்ள மாட்டார்கள் அவர்கள் லாபி வேற என தெரிவித்தார்.

திமுக அரசு பொறுபேற்ற பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அப்பா ஆட்சியில் தினந்தோறும் கற்பழிப்பு கொள்ளை தான் நடக்கிறது. எல்லா துறையிலும் லஞ்சம் ஊழல் தலை விரித்தாடுகிறது.

கனிம வளத்துறையில் ஊழல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கவில்லை ஐந்து அதிகாரிகளால் ஆட்சி நடத்தபடுவதாக குற்றஞ்சாட்டினார்.

Hindusthan Samachar / ANANDHAN