Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று (நவ 14) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டின் குழந்தைகள் நலமாகப் பிறக்க மகப்பேறு நிதியுதவி,
பிறந்ததும் வளமாக வளர ஊட்டச்சத்தை_உறுதிசெய்,
வளர்ந்து பள்ளிக்குச் செல்லும் நிலையிலும்
சத்தான உணவைப் பெறக் காலை_உணவுத்_திட்டம்,
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள்,
உயர்கல்விக்கு உதவ நான்_முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன்,
ஒட்டுமொத்த நலனை உறுதிசெய்யத் 'தமிழ்நாடு மாநிலக் குழந்தைகளுக்கான கொள்கை 2021' எனக் குழந்தைகளின் மீது தாயன்பு காட்டி, உங்கள் கனவுகளுக்கெல்லாம் துணைநிற்கும் திராவிட மாடல் அரசின் சார்பில் எனது குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
உங்களின் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்பேன், நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன், உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன், உங்கள் அனைவரையும் பரந்த பார்வையும், பகுத்தறிவும் கொண்ட உலகக் குடிமக்களாக வளர்த்தெடுப்பேன்!
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b