கொளத்தூர் தொகுதியில் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.) சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், முடிவுற்ற திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததுடன், நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வு செய்தார். கொளத்தூர் பெரியார் நகரில் சென்னை
Mks


சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், முடிவுற்ற திட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததுடன், நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வு செய்தார்.

கொளத்தூர் பெரியார் நகரில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 5.24 கோடியில் செலவில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நகர் நூலகம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக K5 - பெரவள்ளூர் புற காவல் நிலையம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து கொளத்தூர் சிவ இளங்கோ சாலையில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 11.37 கோடி ரூபாயில் கொளத்தூர் காவல்துறை ஆணையர் அலுவலகம் கட்டுமான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து கொளத்தூர் ஜெகந்நாதன் தெருவில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மைய கட்டுமான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் வந்த போது வழிநெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

கொளத்தூர் வருவதற்கு முன்னதாக சென்னை பெரியமேட்டில் பதிவுத்துறை சார்பாக 3.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கான புதிய கட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ