Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 14 நவம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சிறப்பு நகர் மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற துணை தலைவர் தென்மொழி, நகராட்சி ஆணையாளர் இளவரசு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய இடத்தில் புதிய பேருந்து நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சாக்கடை கால்வாய்களை தூய்மையாக்க போதிய பணியாளர் பற்றாக்குறையை சரி செய்ய கோரியும், புதிய தெரு விளக்குகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மன்ற உறுப்பினர்கள் முன் வைத்தனர்.
ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடமிருந்து நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட 7 ஏக்கர் 85 சென்ட் இடத்தில் உள்ள
300 க்கும் அதிகமான வணிக வளாக கடைகள், தரை வாடகை கடைகளிடம் நகராட்சி பணியாளர்களை கொண்டு வாடகை வசூல் செய்யும் நடவடிக்கைக்கான தீர்மானத்தை ஒத்தி வைத்துவிட்டு, புதிய வணிக வளாக கட்டிடங்கள் கட்டி நவீன படுத்தி, ஏற்கனவே வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து முறையாக ஏலம் நடத்தி வாடகை வசூல் செய்ய வேண்டும் என மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
Hindusthan Samachar / Durai.J