Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 14 நவம்பர் (ஹி.ச.)
கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலின் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.
அப்பொழுது உண்டியல், அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.
அதில், நிரந்தர உண்டியலில் ரொக்கமாக ரூபாய் 80 லட்சத்து 02 ஆயிரத்து 563 ரூபாய் இருந்தது.
கோசாலை உண்டியலில் ரொக்கமாக ரூபாய் 3 லட்சத்து 16 ஆயிரத்து 435 ரூபாயும், திருப்பணி உண்டியலில் ரொக்கமாக 1 லட்சத்து, 29 ஆயிரத்து, 489 ரூபாய் இருந்தது.
இது தவிர, 43 கிராம் 100 மில்லி கிராம் தங்கமும், 6 கிலோ 811 கிராம் வெள்ளி மற்றும் பித்தளை 18 கிலோ 175 கிராம் இருந்தது.
உண்டியலில் உள்ள காசுகள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணியில், கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த உண்டியல் எண்ணும் பொழுது திருக்கோயில் தக்கார் ஜெயக்குமார், துணை ஆணையர் செயல் அலுவலர் செந்தில்குமார் இருந்தனர். மேலும் ஆனைமலை அருள்மிகு மாசாணி அம்மன் கோவில் உதவி ஆணையர் செயல் அலுவலர் முத்துராமலிங்கம், பேரூர் சக அலுவலர் பவானி தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பணியில் உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
Hindusthan Samachar / V.srini Vasan