Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)
.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் எம்.பியுமான நடிகர் கமலஹாசன் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
இன்று குழந்தைகள் தினமாம் .
உங்கள் உடல் எடையை வைத்து உங்களைக் குழந்தைகள் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நீங்கள் நாளையின் மூதறிஞர்கள் . இன்றைய மூத்தோர் வெகு விரைவில் உங்களைப்போல் குழந்தைகளாகி விடுவார்கள் . அதுவரை அவர்கள் பாதுகாப்பில் உங்கள் குழந்தைப் பருவத்தை முழுவதுமாக அனுபவியுங்கள்… நல்ல வழிகாட்டுதலுடன் .
நாளை உமதும்தான்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b