Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி,14 நவம்பர் (ஹி.ச.)
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளையின் சார்பில், பொருளாதாரத்தில் பின் தங்கிய 30 குழந்தைகள் சென்னை முதல் தூத்துக்குடி வரை விமானப் பயணம் மேற்கொண்டனர்.
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ரெயின்டிராப்ஸ் அறக்கட்டளை அதன் வருடாந்திர சிறப்பு திட்டமான வானமே எல்லை” எனும் அருமையான மற்றும் ஊக்கமளிக்கும் முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை நகரிலிருந்து பொருளாதார ரீதியாக பின்தங்கிய 30 குழந்தைகள் தங்களது வாழ்நாளில் முதன் முறையாக விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த வருடாந்திர முன்முயற்சியில், ஒரு திரு நங்கை மாணவர் மற்றும் ஒரு பார்வை குறைபாடுள்ள மாணவரும் இணைந்திருந்தனர்.
இதன் மூலம் குடும்ப பின்னணி அல்லது திறன் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தைக்கும் கனவு காணவும் உயர பறக்கவும் உரிமை உண்டு என்ற செய்தி வலியுறுத்தப்பட்டது.
இந்த பயணத்தில் அமைச்சர் பி. கீதா ஜீவன் குழந்தைகளுடன் பயணித்து, அவர்களுடன் கலந்துரையாடி ஊக்கமும் மகிழ்ச்சியும் பகிர்ந்துகொண்டார்.
Hindusthan Samachar / Durai.J