Enter your Email Address to subscribe to our newsletters

பாட்னா, 14 நவம்பர் (ஹி.ச.)
பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் கடந்த 6ஆம் தேதியும் (06.11.2025), 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதியும் (11.11.2025) நடைபெற்றன.
இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன.
பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று (14.11.2025) காலை 8 மணியளவில் தொடங்கியது. அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸ் என பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பீஹார் சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மெகா வெற்றியை பெற்று இருக்கிறது.
19 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நிதிஷ் குமாரை தொண்டர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், மக்கள் உள்ளிட்ட பலரும் புகழ்ந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும், பாஜவினரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரும் மட்டுமல்லாது, அவர்களுக்கு ஆதரவானவர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பீஹார் தலைநகர் பாட்னாவில் நிதிஷ் குமாரை வாழ்த்தி ஒட்டப்பட்டுள்ள வாழ்த்து போஸ்டர்கள் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
பீஹார் அரசியலில் நிதிஷ் தான் உண்மையான புலி என்று வாசகங்கள் கொண்ட வாழ்த்து போஸ்டர்கள் நிதிஷ்குமார் வீட்டின் வெளியே ஒட்டப்பட்டு உள்ளது.
புலி (நிதிஷ்குமாரை குறிப்பிடுகின்றனர்) இன்னமும் உயிருடன் தான் இருக்கிறது என்ற வாசகங்கள் காணப்படுகின்றன. இந்த வித்தியாசமான போஸ்டரில், நிதிஷ் பக்கத்தில் ஒரு புலி நிற்கும் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன.
இப்படி வித்தியாசமான போஸ்டர்கள், பதாகைகளை அவ்வழியே செல்பவர்கள் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர். இன்னும் சிலரோ, அதன் அருகில் சென்று செல்பி போட்டோ மற்றும் வீடியோ எடுத்து கொண்டாடுகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b