Enter your Email Address to subscribe to our newsletters

கயானா, 14 நவம்பர் (ஹி.ச.)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை நியூசிலாந்து 3-1 (ஒரு போட்டி மழையால் ரத்து) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
அதன்படி நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து 2-வது போட்டி 19-ம் தேதி நேப்பியரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ம் தேதி ஹாமில்டனிலும் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷாய் ஹோப் தலைமையிலான அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜான் கேம்பல் 6 வருடங்கள் கழித்து ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்:
ஷாய் ஹோப் (கேப்டன்), அலிக் அதனாஸ், அக்கீம் அகஸ்டே, ஜான் கேம்பல், கீசி கார்டி, ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்டு, ஜஸ்டின் க்ரீவ்ஸ், அமீர் ஜாங்கூ, ஜோஹன் லெய்ன், காரி பியர், ஷெர்பேன் ரூதர்போர்ட், ஜேடன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷமர் ஸ்பிரிங்கர்.
Hindusthan Samachar / JANAKI RAM