Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)
தமிழக வெற்றி கழகம் தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பில், மாம்பலம் தாலுகாவுக்குட்பட்ட வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்து மாவட்ட செயலாளர் விஜய் சபரிநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஜாபர்கான் பேட்டை பகுதியில் இன்று (நவ 14) நடைபெற்றது.
முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கும் உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்தும் இதுவரை உதவித்தொகை வழங்காததால் வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்தும் உதவி தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தவெக தொண்டர்கள் கோஷமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் 30 க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் கட்சி கொடி மற்றும் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் சபரி கூறுகையில்,
முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கும் உதவி தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்தும் இதுவரை உதவித்தொகை வழங்காததால் வருவாய் நிர்வாக ஆணையரை கண்டித்தும் உதவி தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
எஸ்.ஐ.ஆர் குறித்து வரும் ஞாயிறன்று தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி போராட்டம் நடக்க இருக்கிறது.
எஸ்.ஐ.ஆரை நாங்கள் எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b