Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 14 நவம்பர் (ஹி.ச.)
கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில் மெட்டல் டிடெக்டர் வாயிலாக நோயாளிகளின் உறவினர்களின் பைகள் ஆய்வு செய்யப்பட்ட, பின்னர் அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்டு ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 10,000 பேர் வரை உள்நோயாளி மற்றும் வெளி நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் தனியார் ஒப்பந்த அடிப்படையில் 120 பேர் தனியார் காவலராக இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இருப்பினும் அவ்வப் போது எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. இதன் காரணமாக பாதுகாப்பை பலப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டு வந்தது. இதனை அடுத்து மெட்டல் டிடெக்டர் கருவி வாயிலாக பரிசோதனை மேற்கொள்ள பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தற்பொழுது இரண்டு நுழைவாயில்கள், குழந்தைகள் பாட்டு, சிகிச்சை பெரும் இடங்கள் என ஏழு இடங்களில் மக்கள் டிடெக்டர் பயன்படுத்தி சோதனை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / V.srini Vasan