டிசம்பர் 1 ல் துவங்க உ ள்ள பார்லிமென்ட் குளிர் கால கூட்டத்தொடரில் சிறிய கட்சி எம்.பி.க்கள் பேசுவதற்கான கால அவகாசம் 5 நிமிடங்களாக உயர்வு
புதுடெல்லி, 14 நவம்பர் (ஹி.ச.) லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையிலேயே பேச நேரம் ஒதுக்கப்படுகின்றன. சிறிய கட்சி எம்.பி.,க்கள் பேச இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்த கா
டிசம்பர் 1ல் துவங்க உ ள்ள பார்லிமென்ட் குளிர் கால கூட்டத்தொடரில் சிறிய கட்சி எம்.பி.,க்கள் பேசுவதற்கான கால அவகாசம் 5 நிமிடங்களாக உயர்வு


புதுடெல்லி, 14 நவம்பர் (ஹி.ச.)

லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை பலத்தின் அடிப்படையிலேயே பேச நேரம் ஒதுக்கப்படுகின்றன.

சிறிய கட்சி எம்.பி.,க்கள் பேச இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்த கால அவகாசத்தை உயர்த்த கோரிக்கை எழுந்தது.

புதிய துணை ஜனாதிபதியாக பதவியேற்றதில் இருந்தே எம்.பி.,க்கள் பலரையும் அழைத்து ஆலோசனை நடத்தி வரும் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்த கோரிக்கைக்கு தீர்வு கண்டுள்ளார்.

அதன்படி, சிறிய கட்சி எம்.பி.,க்கள் பேசுவதற்கான கால அவகாசத்தை, 5 நிமிடங்களாக உயர்த்த உத்தரவிட்டுள்ளார்.

இந்த நடைமுறை, டிச.1ல் துவங்க உ ள்ள குளிர் கால கூட்டத்தொடரில், ராஜ்யசபாவில் அமலுக்கு வருகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM