Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)
முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கத்திப்பாராவில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை இன்று (நவ 14) மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
பீகார் தேர்தலில் காங்கிரசுக்கு எப்பொழுதும் பின்னடைவு கிடையாது அதிகாரத்தை சுவைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி கிடையாது.
இது மக்களுக்கான இயக்கம். முகம் இல்லாதவர்களுக்கும், பேச்சுரிமை இல்லாதவர்களுக்குமான இயக்கம். வெற்றி தோல்வியை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை இது மக்கள் இயக்கம். இயங்கிக் கொண்டே இருக்கும். இதை தோல்வி என்று சொல்ல முடியாது வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்... முதலில் பாஜக முன்னிலையில் இருந்தது பின்னர் RJD முன்னிலையில் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்
அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நாங்கள் வெற்றி பெற்றால் துள்ளி குதிப்பதும், வெற்றி வாய்ப்பை இழந்தால் கவுந்தடித்து படுப்பதும் இல்லை.
பல லட்சம் வாக்குகள் பீகாரில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. அதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். ஜனநாயகம் வீழ்வதற்கு யாரும் அனுமதிக்க கூடாது. யாராவது ஜனநாயகத்தை வீழ்த்த நினைத்தால் மக்கள் வெகொண்டு எழ வேண்டும் என்பதுதான் எங்களின் நேரு பிறந்தநாள் பிரகடனம்.
நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம்.
400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொன்ன பாஜகவை பெரும்பான்மை இல்லாமல் ஆக்கி இருக்கிறோம். அவர்களின் செல்வாக்கை குறைத்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b