Enter your Email Address to subscribe to our newsletters


கோவை, 14 நவம்பர் (ஹி.ச.)
கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை கல்லூரி இணைந்து ஸ்ரீலங்காவிலிருந்து ஜவுளிதுறை தொழில் அதிபர்கள் 30 பேர் அடங்கிய குழு கோவை ராமநாதபுரம் சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி மையத்திற்கு வருகை தந்தனர்.
கைத்தறி, ஜக்கார்டு டிசைனிங், AI தொழில்நுட்பம்,மேட் விவிங் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டனர். இந்த வருகையின் மூலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள நட்பு வலுபெற கைத்தறி வழிவகை செய்து மேம்படுத்துவதற்கான இந்த சந்திப்பு அமைந்ததாக தெரிவித்தனர்.
புதிய தொழில்நுட்பங்களையும் அதிநவீன கைத்தொழில் உள்ள மாற்றங்களையும் புதிய நவீன யுக்திகளையும் அறிந்து கொண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
வரும் காலங்களில் கைத்தறி ஐடி நிறுவனங்களுக்கு ஈடாக அமையும் என்று வளர்ச்சி பெருமான கைத்தறி தொழில் வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சில்க் வில்லேஜ் நிறுவனர் உரிமையாளர் கைத்தறி முருகேசன், மேனேஜர் வினோத், அட்வைசர் ராஜாராம் சில்க் வில்லேஜ் நிர்வாக அதிகாரிகள் சுகன்யா ஜோதிமணி கலை அரசி , அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / V.srini Vasan