மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு
செங்கல்பட்டு, 14 நவம்பர் (ஹி.ச.) செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே திருப்போரூர் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.
மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு


செங்கல்பட்டு, 14 நவம்பர் (ஹி.ச.)

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே திருப்போரூர் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

தாம்பரம் விமானப்படை தளத்துக்கு சொந்தமானதாக கருதப்படும் இந்த விமானத்தில் இருந்த 3 பேர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானம் எங்கிருந்து வந்தது? எங்கே சென்றுகொண்டிருந்தது? கோளாறு காரணமாக விமானம் கீழே விழுந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை அருகே நேற்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சாலையில் தரையிறங்கிய நிலையில் இன்று (நவ 14) மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Hindusthan Samachar / vidya.b