குழந்தைகளுக்காக 360 டிகிரியில் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் - உதயநிதி ஸ்டாலின்
சென்னை , 14 நவம்பர் (ஹி.ச) குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம், என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்
Tweet


சென்னை , 14 நவம்பர் (ஹி.ச)

குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம், என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

மனதை மயக்கும் மழலை மொழியாலும் - சின்ன சின்ன குறும்பாலும் - தூய அன்பாலும் - ஒவ்வொரு இல்லத்தையும் வண்ணமயமாக்குவது குழந்தைகள்

இனிய குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டுக் குழந்தைகளின் ஊட்டச்சத்து - ஆரோக்கியம் - கல்வி - விளையாட்டு என 360 டிகிரியில் யோசித்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களின் முன்னேற்றத்துக்கு என்றும் துணை நிற்போம், குழந்தைகளை எந்நாளும் கொண்டாடுவோம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ