பீகாரின் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும், பீகாரை போன்று தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்படும் – வானதி சீனிவாசன்
சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.) சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பிர
Vanathi


சென்னை, 14 நவம்பர் (ஹி.ச.)

சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீதான மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில், 190க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.. இது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் அளித்துள்ள தெளிவான தீர்ப்பை காட்டுகிறது.

இந்த வெற்றி, பிரதமர் மோடியின் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு கிடைத்த வெற்றி. பீகார் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க, இரட்டை என்ஜின் அரசு தேவை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

பெண்கள் அதிக அளவில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளதை சுட்டிக்காட்டிய வானதி சீனிவாசன் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது, என்றார்.

இன்னும் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நெருங்கி வந்துக்கொண்டுள்ளது, எனவே இந்த ஐந்து மாநில தேர்தலுக்கும், பீகாரின் வெற்றி அடிப்படையாக இருக்கும்.மேலும், தமிழகத்திலும் இதேபோன்ற தேர்தல் முடிவுகள் வரும் தமிழகத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறும்.அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

உங்களது தோல்விக்கான காரணம் நீங்கள் தானே தவிர, எஸ் ஐ ஆர் கிடையாது.எஸ்ஐஆர் வந்த பிறகு எங்களது வாக்குகள் திருடப்பட்டுள்ளது என யாரும் கூறவில்லை, உண்மையான வாக்களர்கள் ஒருவர் கூட விட்டு விடாமல் அவர்களது ஜனநாயக கடமையை காப்பாற்றுவதற்காக இந்த எஸ் ஐ ஆர் கொண்டுவரப்பட்டுள்ளது.

Sir எதிர்ப்பதாக திமுகவினர் தேர்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் பி எல் ஓ வைத்து ஏதோ ஒன்று செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.., என்னதான் எதிர்க்கட்சிகள் எஸ்ஐஆர் தொடர்பாக பல குற்றச்சாட்டை முன் வைத்தாலும் கூட பீகாரில் தங்களுக்கு எது வேண்டும் என்று மக்கள் தெளிவாக முடிவெடுத்து உள்ளார்கள்.

குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு எதிரானது என்று குறிப்பிட்ட அவர், ஒரு குடும்பத்தின் கையில் ஆட்சி இருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். பீகார் மக்களும் குடும்ப அரசியலை நிராகரித்துள்ளனர்.

தொடர் தோல்விகளை காங்கிரஸ் சந்தித்து வருவது குறித்து கருத்து தெரிவித்தவர், காங்கிரஸ் மக்களை விட்டு வெகு தூரம் சென்று விட்டது அவர்கள் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் ஒரு குடும்பத்தின் பிடியில் இருப்பதால் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் இந்த தொடர் தோல்விகளை சந்திப்பதற்கான காரணம் என தெரிவித்தார்.

முன்னதாக தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் பிகார் தேர்தலில் முன்னிலையில் இருப்பதை கொண்டாடினர்.

Hindusthan Samachar / P YUVARAJ