டெல்லியில் உள்ள பழைய ரயில் நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்களை மாற்ற வேண்டும் - அமித்ஷாவுக்கு பாஜக எம்.பி. கடிதம்
புதுடெல்லி, 2 நவம்பர் (ஹி.ச.) டெல்லியின் பெயரை மாற்றக் கோரி சாந்தினி சவுக் பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
டெல்லியில் உள்ள பழைய ரயில் நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்களை மாற்ற வேண்டும் - அமித்ஷாவுக்கு பாஜக எம்.பி. கடிதம்


புதுடெல்லி, 2 நவம்பர் (ஹி.ச.)

டெல்லியின் பெயரை மாற்றக் கோரி சாந்தினி சவுக் பாஜக எம்.பி. பிரவீன் கண்டேல்வால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என்று மாற்ற வேண்டும் என்று விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரி வருகிறது.

இந்நிலையில் பிரவீன் கண்டேல்வால் தனது கடிதத்தில் டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என மாற்ற வேண்டும்..

மேலும் டெல்லியில் உள்ள பழைய ரயில் நிலையம் மற்றும் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்றும் டெல்லியில் பாண்டவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும்.

டெல்லியின் பெயரை 'இந்திரபிரஸ்தா' என்று மாற்றுவதன் மூலம், இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தர்மத்தை எதிர்கால சந்ததியினருக்கு கடத்த முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM