Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 2 நவம்பர் (ஹி.ச.)
கரூரிலிருந்து சாணார்பட்டி வழியாக கோபால்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு
கரூர் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்மோகன் (42),அவரது மகன் குகன் (12) காரில் வந்து கொண்டு இருந்தனர். இந்த காரை ராஜ்மோகன் ஒட்டி வந்தார்.
இந்நிலையில் கோபால்பட்டியில் கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது கட்டுப்பாட்டு இழந்த கார் சாலை மைய தடுப்பு சுவரில்(சென்டர் மீடியனில்) மோதி விபத்துக்குள்ளானது.
இதில் தந்தை மற்றும் மகன் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இவர்களே அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
கடந்த வியாழக்கிழமை (அக்.30)அதிகாலை இதை கோபால்பட்டி - சாலை மைய தடுப்பில் மோதி கோயம்புத்தூர்-காரைக்குடி சென்ற அரசு பேருந்து விபத்தில் சிக்கி 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் தொடர்ச்சியாக இதே இடத்தில் விபத்து கண்டித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.
அவர்களிடம் சாணார்பட்டி போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைத்தனர்.
மேலும் கோபால்பட்டி கூட்டுறவு வங்கி முதல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சுமார் 30 மீ. நீளத்தில் குறுகிய அக லமே உள்ள சாலையில் இந்த தடுப்புச்சுவர்
அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட லாரி, கார், பேருந்து, இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து இந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறையினர் தொடர் விபத்தை
ஏற்படுத்தும் இந்த தடுப்புச் சுவரை முற்றிலுமாக இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.
Hindusthan Samachar / Durai.J