Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 நவம்பர் (ஹி.ச)
நாடு முழுவதும் கிறிஸ்தவர்களால் நவம்பர் 2 ஆம் தேதி கல்லறை திருநாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கல்லறை திருநாளையொட்டி சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களின் கல்லறைகளில் மலர்களை வைத்து ஜெபம் செய்து வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2 ஆம் தேதி கத்தோலிக்க கிறித்தவர்களால்
கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு,
அந்த நாளில் தங்கள் குடும்பத்தில் உயிரிழந்தவர்களின் கல்லறைத் தோட்டத்தில், இறந்த தங்களது உறவினர்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்து இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
மேலும் கல்லறைகள் முன்பு சில கன்னியாஸ்திரிகளும் மெழுகுவர்த்தி ஏற்றி ஜெபம் செய்து பிரார்த்தனை நடத்தினர்.
சென்னையில் பட்டினப்பாக்கம், கீழ்பாக்கம், அம்பத்தூர், சென்ட்ரல் எதிரில் உள்ள கிறிஸ்தவர்கள் கல்லறை, கத்திப்பாரா கல்லறை எனச் சென்னையில் பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள் கல்லறைகள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Hindusthan Samachar / P YUVARAJ