Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 நவம்பர் (ஹி.ச)
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் சென்னை ஓப்பன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது
பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
இந்நிலையில் போட்டி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.
இன்று மாலை 6 மணிக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளுக்கான
இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிம்பர்லி மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த ஜானிஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.அதே போல
இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டார்ம் ஹண்டர், ரோமானியாவை சேர்ந்த மோனிகா மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த அல்டிலா,ஜானிஸ் ஆகியோர் மோதுகின்றனர்.
வெற்றி பெறுபவர்களுக்கு மொத்தமாக ரூபாய் 2.40 கோடி பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
இன்று நடைபெறும் நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர்,துணை முதலமைச்சர் தமிழ்நாடு டென்னிஸ் அசோசியேஷன் தலைவர் அமிர்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசு தகை மற்றும் கோப்பைகளை வழங்க உள்ளனர்.
Hindusthan Samachar / P YUVARAJ