Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 2 நவம்பர் (ஹி.ச)
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சிகளின் கூட்டம் இன்று சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில் திமுக சார்பாக 64 கட்சிகளுக்கு அழைப்பானது விடுக்கப்பட்டிருந்தது அதில் தாவீகா அமுமுக போன்ற இருபது கட்சிகளை தவிர்த்து 40-க்கும் மேற்பட்ட கட்சியினர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது,
மக்கள் வாக்குரிமையை பறிக்கும் விதமாகவும் அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றது. அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இதற்கு எதிராக தமிழகம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது.
நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை, ஆனால் அதற்காக உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும், பதற்றமில்லாத சூழலில் அதை செய்ய வேண்டும், அப்போது தான் அந்த பணிகளை முறையாக செய்ய முடியும் மாறாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முழுமையான திருத்த பணிகள் செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே பார்கிறோம்.
அதை தான் பிகாரில் செய்தார்கள் இப்போது மற்ற மாநிலங்களிலும் செய்ய நினைக்கிறார்கள்.
அதனால் தான் அதனை எதிர்க்கிறோம். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காக்க ஜனநாயக குரலைக் காக்க வரைவு தீர்மானத்தை முன் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ