கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் வரலாறு அறிந்து கொள்ள கணினி மூலம் தொடுத்துரை வசதி துவக்கம்
கோவை, 2 நவம்பர் (ஹி.ச.) கோவை, பேரூரில் உள்ள பட்டீஸ்வரம் திருக்கோயில் இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. இந்த திருகோவிலின் வரலாற்றுகளை தெரிந்து கொள்ள கணினி மூலம் தொடுதிரை அமைத்து இன்று துவக்கி உள்ளனர். அங்கு வரும் பக்தர்கள் அதனைப் ப
Coimbatore Perur Patteeswarar Temple: Computer-based interactive system launched to learn about the temple’s history – Devotees benefited by exploring it!


Coimbatore Perur Patteeswarar Temple: Computer-based interactive system launched to learn about the temple’s history – Devotees benefited by exploring it!


கோவை, 2 நவம்பர் (ஹி.ச.)

கோவை, பேரூரில் உள்ள பட்டீஸ்வரம் திருக்கோயில் இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது. இந்த திருகோவிலின் வரலாற்றுகளை தெரிந்து கொள்ள கணினி மூலம் தொடுதிரை அமைத்து இன்று துவக்கி உள்ளனர். அங்கு வரும் பக்தர்கள் அதனைப் பார்த்து பயன் அடைந்து வருகின்றனர்.

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கனக சபை 17 ம் நூற்றாண்டில் அழகாத்ரி நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த கோயில் சிவபெருமானின் பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்திய ஸ்தலமாகவும், கோயிலின் கட்டமைப்பு பல்வேறு கலை நுட்பத்துடன் விளங்குகிறது.

திருக்கோயில் இரண்டாம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டது.

மற்ற கோவில்களைப் போல் சிவலிங்கம் இல்லாமல் இங்கு உள்ள பட்டீஸ்வரர் சிவலிங்கத்தின் தலையில் காமதேனு கன்றின் குளம்படி தழும்பு இருப்பதை இன்னும் நம்மால் காண முடியும். கோவிலின் முன் பிறவாப்புளி என்ற புளிய மரமும் உள்ளது. இந்த கோவிலில் உள்ள புளிய மரத்தின் விதை நாம் எங்கு எடுத்துச் சென்று விதைத்தாலும் அது முளைக்காது. இப்பகுதியில் உள்ள மாட்டு சாணத்தில் கூட புழுக்கள் வராது.

இந்த கோவில் பல்வேறு கலை நயமிக்க வேலைப்பாடுகள் நிறைந்த கோபுரங்கள், மண்டபங்கள், தூண்கள் நிறைந்து இருக்கின்றன.

எல்லா சிவாலயங்களிலும் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும், ஆனால் ஆடி முடிய போகும் நிலையில் நடராஜர் எப்படி இருப்பார் என்பதை இக்கோயிலில் காணலாம்.

இந்தக் கோவிலில் இருக்கும் நடராஜரின் முகத்தில் ஒருவித குறும்பு பார்வை தெரிகிறது. கலை நயமிக்க வகையில் நடராஜர் சிலை அமைந்து உள்ளது. இங்குள்ள கனக சபையில் மகாவிஷ்ணு, பிரம்மா, காளி தேவி, சுந்தரர் ஆகியோர் நடராஜன் தனது தாண்டவ நடன தரிசனத்தை காட்சி தரும் வகையில் அமைந்து உள்ளது.

சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலுக்கு அடுத்தபடியாக திருவாதிரை ஆருத்ரா தரிசனம் திருவிழா மிக கோலாகலமாக கொண்டாடப்படுவதால் இந்த ஆலயத்தை மேலே சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தங்கத்தால் ஆன நடராஜர் சிலை உள்ளது.

இந்தக் கோவில் விநாயகர் சன்னதி அரசன் மரத்தடியில் சிவன் சன்னதியும் உள்ளது. இந்த அரச மரத்தடியில் தான் சிவபெருமான் தாண்டவம் ஆடியதாக கூறப்படுகிறது. இந்த கோவில் இருக்கும் பிறவா புளி, புளியமரம் மற்றும் இரவா பனை என புளியமரம் மற்றும் பனைமரம் ஆகிய தல விருச்சிகமாக கொண்டு உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கோவிலின் சிறப்புகளை பக்தர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அருகிலுள்ள மற்ற கோவில்கள் பற்றி அறிந்து கொள்ள கணினி தொடுதிரை வசதி இன்று முதல் துவங்கப்பட்டு உள்ளது.

இதனை கோவை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி அங்கு வந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி இதனை துவக்கி வைத்தார்.

Hindusthan Samachar / V.srini Vasan