Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 2 நவம்பர் (ஹி.ச.)
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கெங்கமுத்தூர் பிச்சால் மகள் தனலட்சுமி (வயது 19).
இவர் அழகர் கோயில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியி யல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
தனலட்சுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி நோய் தாக்கம் அதிகமானதால் மனம் வெறுத்து வாழ்வதைவிட சாவதே மேல் என்று முடிவு செய்து தோட்டத்திற்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து ரத்த வாந்தி எடுத்தார்.
உடனே தனலட்சுமியை மதுரை அரசு மருத்துவக்கு108 ஆம்புலன்ஸ்மூலம் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி,சப் இன்ஸ்பெக்டர்கள் பழனி சிவகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Hindusthan Samachar / Durai.J